காஷ்மீரில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

By பீர்சதா ஆஷிக்

காஷ்மீரில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இது குறித்து இன்று (திங்கட்கிழமை) ராணுவத் தரப்பில், "அனந்தநாக் மாவட்டத்திலுள்ள அவோரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்படி ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிரவாதிகளைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன" என்று கூறப்பட்டுள்ளது.

ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இரண்டு தரப்பிடமிருந்தும் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்ததாகவும். சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாகிதின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்தத் துப்பாக்கிச் சூடு குறித்து ராணுவத் தரப்பில் முழு விவரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

ஜம்மு- காஷ்மீரில் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை ராணுவத்தினர் முடக்கிவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்