மதக்கலவரங்கள் அதிகரித்து வருகின்றன: பிரணாப் முகர்ஜி வருத்தம்

அண்மைக்காலமாக நாட்டில் சில பகுதிகளில் அதிகரித்து வரும் மதக்கலவரங்கள் வருத்தம் அளிப்பதாக ஜனாதிபதி பிரணாப முகர்ஜி தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் போலீஸ் அகடமியில், பயிற்சி முடித்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்தியில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.

மேலும், மதக்கலவரங்கள் பரவாமல் தடுக்க உள்ளாட்சி நிர்வாகங்கள் திறம்பட செயல்படுவது அவசியம். மதக்கலவரங்களை கட்டுப்படுத்துவது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது.

மதக்கலவரங்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கின்றன. எனவே மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆரம்ப நிலையிலேயே கலவரங்களை இனம் கண்டு ஒடுக்குவது நல்லது என்றார்.

இந்தியாவின் அமைதிக்கு வெளியில் இருந்து பயங்கரவாதமும், உள்ளுக்குள் இருந்து நக்சல் அமைப்புகளும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றன. நக்சலைட்டுகளை ஒடுக்குவதில் அரசு திறம்பட செயல்பட்டு வருகிறது என்றார்.

சர்தார் வல்லபாய் படேல், குடிமைப் பணியாளர்கள் நடுநிலையாகவும் ஊழல் அற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என விரும்பினார். அரசியலுக்கும், சாதி,மத பேதங்களுக்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். அவரது கொள்கையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE