அசைவ உணவுப் பிரியர்கள் நிறைந்த மாநிலங்களில் தெலங் கானா முதலிடம் பிடித்திருப்பதாக கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
நாடு முழுவதும் எந்த மாநிலத்தில் அசைவ உணவுப் பிரியர்கள் அதிகம் வசிக்கின்றனர் என்ற ஆய்வில் ரிஜிஸ்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா சர்வே எனும் அமைப்பு ஈடுபட்டது. 15 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் நாட்டிலேயே தெலங்கானாவில் தான் அசைவப் பிரியர்கள் அதிகம் வசிப்பது தெரியவந்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள ஆண்க ளில் 98.8 சதவீதத்தினரும், பெண்க ளில் 98.6 சதவீதத்தினரும் அசைவ உணவை விரும்பி உண்பவர் களாக உள்ளனர். குறிப்பாக ஹைதராபாத் நகரில் அசைவப் பிரியர்கள் அதிக அளவில் வசிப்பதாகவும், பிற மாவட்டங் களில் சைவம், அசைவம் என சமமான அளவில் உண்போர் வசிப்பதும் தெரிய வந்துள்ளது.
தெலங்கானாவில் காலை சிற்றுண்டிக்கே அசைவம் உண் ணும் பழக்கம் தொன்று தொட்ட காலம் முதலே தொடர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இறைச்சிக்கான ஆடு வளர்ப்பில் தெலங்கானா 2-வது இடத்தில் இருப்பதே இதற்கு காரணம். மேலும் கோழி வளர்ப்பிலும் இம்மாநிலம் 4-வது இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் மேற்கு வங்கம், ஆந்திரா, ஒடிசா, கேரளா ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன. சைவப் பிரியர்கள் அதிகம் வசிப்போர் பட்டியலில் ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago