மும்பை தாக்குதல் வழக்கு: சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை

By செய்திப்பிரிவு

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய சாட்சிகளிடம் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் குறுக்கு விசாரணை நடைபெற்றது.

மும்பையில் 2008 ஆம் ஆண்டு 10 பேர் அடங்கிய லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் குழு தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 166 பேர் உயிரிழந்தனர்.

300க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் மீது பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்விசாரணையில், முக்கிய சாட்சிகளான தேர்தல் அதிகாரி மற்றும் முஸ்லிம் வணிக வங்கி மேலாளர் ஆகியோரிடம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு வழக்கறி ஞர்கள் குறுக்கு விசாரணை செய்தனர்.

“ஒகாரா மாவட்ட தேர்தல் அலுவலர் ஜாவேத், தாக்குதலில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளில் ஒருவருடைய உறவினர்களின் முகவரியை அளித்தார். இதன் மூலம்தான் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

முஸாபராபாத் வங்கிக் கிளையில் இருந்து கராச்சிக்கு பணம் ஐந்து தவணைகளில் கொடுக்கப்பட்டது. அந்த வங்கியின் மேலாளரும், தேர்தல் அலுவலரும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர்” என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சௌத்ரி முகமது அஸார் தெரிவித்தார்.தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த பயங்கரவாதியின் உறவினர்களின் பெயர்களைத் தெரிவித்ததுடன், இறந்த பயங்கரவாதியின் அடையா ளத்தை உறுதிப்படுத்த மேலும் சில ஆவணங்களை அவர் அளித்தார் என்று சௌத்ரி மேலும் கூறினார்.

தாக்குதலில் ஈடுபட்டு உயிரிழந்த பயங்கரவாதியின் பெற்றோர் பெயரைத் தெரிவித்த தேர்தல் அதிகாரியை, புதிதாக நியமிக்கப்பட்ட எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ராஜா ரிஸ்வான் அப்பாஸி குறுக்கு விசாரணை செய்தார் எனத் தகவல்கள் தெரி விக்கின்றன. இத்தாக்குதலில் ஈடுபட்டு உயிரு டன் பிடிபட்ட ஒரே குற்றவாளியான அஜ்மல் கசாப் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் ஒகாரா மாவட்டத்தைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர, ஜாவேத் (22), பஹதுல்லா (23) ஆகியோரும் ஒகாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இவ்வழக்கு விசாரணை வரும் ஜனவரி 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மும்பை தாக்குதல் வழக்கு தொடர்பாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் முக்கிய தளபதி ஸகியுர் ரெஹ்மான் லக்வி, அப்துல் வாஜித், மஸார் இக்பால், ஹமத் அமின் சாதிக், சாஹித் ஜமீல் ரியாஸ், ஜமீல் அகமது, யூனுஸ் அன்சும் ஆகியோரை 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீதுதான் பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுகிறது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்