பிஹாரில் லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் (ஆர்.ஜே.டி.) சரத் யாதவ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு.) கட்சி இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இரு கட்சிகளும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக லாலு பிரசாத்துக்கு நெருக்கமான கட்சித் தலைவர் ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, "மகாராஷ்டிரா, ஹரியாணா சட்ட சபைத் தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இரு கட்சிகளின் இணைப்பு பற்றி ஆர்.ஜே.டி. தலைவர் லூலு பிரசாத், ஜே.டி.யு. தலைவர்கள் சரத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது பாஜக செல்வாக்குப் பெறுவதைத் தடுக்கும் வகையில் ஆர்.ஜே.டி.யும், ஐக்கிய ஜனதா தளமும் இணைவதற்கு அவர்கள் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளனர்" என்றார்.
ஐக்கிய ஜனதா தளத் தலைவர் ஒருவர் கூறும்போது, "மதச்சார்பற்ற அமைப்புகளை வலுப்படுத்தும் வகையில் ஆர்.ஜே.டியுடன் எங்களின் கட்சியை இணைப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம்" என்றார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆர்.ஜே.டி.யும், ஜே.டி.யு.வும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றன.
இந்நிலையில், 2015-ம் ஆண்டு தேர்தலின்போது, ஆர்.ஜே.டி.யும், ஜே.டி.யு.வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், தொகுதி பங் கீட்டில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க, இரு கட்சிகளின் தொண்டர்களும் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக தேர்தலை எதிர்கொள்வதற்கு வசதியாகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago