குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை தரக்குறைவாக விமர்சித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுவதற்கு தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது.
மோடிக்கு எதிரான தனது விமர்சனம் பற்றி சித்தராமையா அனுப்பிய விளக்கத்தை நிராகரித்த தேர்தல்ஆணையம் இனி சித்தராமையா மிக கவனமாக இருக்கவேண்டும் என்றும் எச்சரித்துள்ளது. பிரதான கட்சியின் தலைவரை விமர்சிக்க பயன்படுத்தும் வார்த்தைகள் தொடர்பான விளக்கத்தை ஏற்க முடியாது என்றும் அது தெரிவித் திருக்கிறது.
சித்தராமையாவின் விமர்சனம் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது. கட்சியின் கொள்கைகள், திட்டங்கள், முந்தைய சாதனைகள், பணிகள் பற்றியதாகவே எதிர்க்கட்சிகள் பற்றிய விமர்சனங்கள் இருக்க வேண்டும். வேட்பாளர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என முன்னதாக சித்தராமையாவுக்கு அனுப்பிய நோட்டீஸில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
சட்டப்படி சந்திக்கத் தயார்
மக்களவை தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கும் முதல்வர் சித்தராமையா தேர்தல் ஆணையத்தின் கண்டனம் குறித்து வியாழக்கிழமை பேசுகையில் கூறியதாவது: “தேர்தல் ஆணையத்தின் நடவடிக் கையை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். மோடியை விமர்சிப்பதை நிறுத்தமாட்டேன்” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
30 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago