டெல்லியில் சோனியா வீடு முன்பு பிப்.10-ல் உண்ணாவிரதம்

By செய்திப்பிரிவு

தியாகி பென்ஷன் ஆணை உடனே வழங்க வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வீட்டு முன்பு பிப்ரவரி 10-ம் தேதி உண்ணாவிரதம் நடக்கிறது. இதற்காக பிரெஞ்ச் இந்திய புதுச்சேரி பிரதேச விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் செவ்வாய்க்கிழமை டெல்லி புறப்பட்டனர்.

புதுவை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி களின் தியாகத்தை உணர்ந்து, அவர்களது பெயர்களை தியாகி பென்ஷன் பட்டியலில் சேர்க்க பிரெஞ்ச் இந்திய புதுச்சேரி பிரதேச விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி மத்திய இணை அமைச்சர் வி.நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே ஆகியோரைச் சந்தித்து மனு தந்தனர். இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதையடுத்து டில்லியில் சோனியா வீடு முன்பு வரும் பிப்ரவரி 10-ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முடிவு எடுத்தனர். அதன்படி நற்பணி இயக்கத்தினர் இயக்கத் தலைவர் சிவராஜ் தலைமையில் செவ்வாய்க்கிழமை புதுச்சேரியிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்