பறவைக் காய்ச்சலால் பீதியடையத் தேவையில்லை: கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேட்டி

கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் மூன்று மாவட்டங்களில் மட்டுமே உள்ளது. அந்த வைரஸ் பறவைகளை மட்டுமே பாதிக்கும், மனிதர்களைப் பாதிக்காது என கண்டறியப்பட்டுள்ளதால் பீதியடையத் தேவையில்லை என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர வைக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பின் நெறிமுறைகளின்படி, சாத்திய முள்ள அனைத்து முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. போதுமான தடுப்பு மருந்துகள் கிடைக்கின்றன. கூடுதலாக மத்திய அரசிடமிருந்து தருவிக்கப்படு கின்றன. இதில் சிறு கவனக்குறை வுக்கும் வாய்ப்பளிக்க விரும்ப வில்லை. வாத்து வளர்ப்போருக்கு கூடுதல் இழப்பீடு வழங்க ரூ. 2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆழப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங் களில் எச்-5 ஏவியன் இன்புளூ யன்சா வைரஸ் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 12 கிராமங்களில் உள்ள பறவைகளை அரசு அலு வலர்கள் அழித்து வருகின்றனர்.

மத்திய அரசு 2 நபர் குழுவை கேரளத்துக்கு அனுப்பி வைத் துள்ளது. கடந்த 9-ம் தேதி வாத்துகள் இறந்த தகவல் வெளியானது. சரியான சமயத் தில் செயல்பட மாநில அரசு தவறிவிட்டது என எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

44 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்