காஷ்மீரில் பாஜகவை எதிர்த்து போட்டியிட லோக் ஜனசக்தி முடிவு: மத்தியில் மட்டுமே கூட்டணி என பாஸ்வான் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவை எதிர்த்துப் போட்டியிட லோக் ஜனசக்தி கட்சி முடிவு செய்துள்ளது.

பாஜகவுடன் கூட்டணி என்பது மத்தியில் மட்டுமே என்று லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய உணவுத் துறை அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் கூறி யுள்ளார். நேற்று நகர் வந்தி ருந்த பாஸ்வான் கூறும்போது, ‘காஷ்மீரில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் குறித்து எனது கட்சியினருடன் ஆலோசனை நடத்த இங்கு வந்துள்ளேன். இதில், பெரும்பாலானவர்கள் தனித்துப் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கட்சியின் ஆட்சிமன்றக் குழு கூடி இறுதி முடிவு எடுக்கும்’ எனத் தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருப்பது குறித்து விளக்கமளித்த பாஸ்வான், ‘எங்கள் கட்சியின் கூட்டணி மத்தியில் மட்டுமே தவிர மாநிலங்களில் அல்ல. இதற்கு முன் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தபோது, மாநில தேர்தல்களில் தனித்தே போட்டியிட்டு வந்தோம். காஷ்மீர் தேர்தலை பொறுத்தவரை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அவர் அவரது கட்சிக்கான முக்கியத்துவத்தை பொறுத்து முடிவு எடுப்பார். நாங்கள் எங்கள் கட்சி நலனை மனதில் கொள்வோம்’ என்றார்.

இதற்கு முன்பும் ஜம்மு-காஷ்மீரில் லோக் ஜனசக்தி போட்டியிட்டுள்ளது. ஆனால், எந்த தொகுதியிலும் வெற்றி பெற்றதில்லை. காஷ்மீரில், நவம்பர் 25 முதல் டிசம்பர் 2 வரை ஐந்து கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

24 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்