ஹைதராபாத்தில் போலியோ பாதிப்பு: அமைச்சர் தலைமையில் உயர்நிலைக் குழு ஆலோசனை

By என்.மகேஷ் குமார்

ஹைதராபாத் நகரில் ஒரு குழந்தைக்கு போலியோ வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து தெலங்கானா மாநில சுகாதாரத் துறை உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் போலியோ நோயை ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏறக்குறைய இந்தியாவில் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதாக கருதப்படும் நிலையில், தற்போது ஹைதராபாத் அம்பர்பேட்டை சேவஜ் பகுதியில் ஒரு குழந்தைக்கு போலியோ வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் அந்த குழந்தையின் ரத்தம் மும்பை பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அந்த குழந்தைக்கு போலியோ பாதிப்பு இருப்பது உறுதி செய் யப்பட்டுள்ளது.

ரத்தப் பரிசோதனை

இதனைத் தொடர்ந்து தெலங் கானா சுகாதாரத்துறை அமைச்சர் லட்சுமி ரெட்டி தலைமையில் சுகாதாரத்துறை உயர் அதிகாரி களின் ஆலோசனை கூட்டம் ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அம்பர் பேட்டை, சேவஜ், உட்பட ஹைதராபாத், ரங்கா ரெட்டி மாவட் டங்களில் உள்ள 12 மண்ட லங்களில் வீடு வீடாக ஆய்வு நடத்தி உடனடியாக போலியோ சொட்டு மருந்து வழங்க தீர் மானிக்கப்பட்டுள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை இந்த மண்ட லங்களில் உள்ள அனைத்து பகுதியிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கவும், இலவச ரத்த பரிசோதனை செய்ய வும் திட்டமிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

33 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

மேலும்