கருத்தடை முகாமில் உயிரிழந்த பெண்களின் குழந்தைகளை தத்தெடுக்க சத்தீஸ்கர் அரசு ஆலோசனை

By பிடிஐ

சத்தீஸ்கர் அரசு நடத்திய கருத்தடை முகாமில் சிகிச்சைப் பெற்று உயிரிழந்த 14 பெண்களின் குழந்தைகளை தத்தெடுக்க அம்மாநில அரசு ஆலோசித்து வருகிறது.

சத்தீஸ்கரின் பிலாஸ்ப்பூரில் அரசு நடத்திய கருத்தடை முகாமில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின்னர் உடல்நலக்குறைவால் அப்பாவிப் பெண்கள் 14 பேர் உயிரிழந்தனர். சிகிச்சைப் பெற்ற 120-க்கும் மேற்பட்ட பெண்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

சிகிச்சையில் ஏற்பட்ட கோளாறு குறித்த விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உயிரிழந்த பெண்களின் குழந்தைகளை தத்தெடுக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இந்த முடிவு குறித்து சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் தலைமையிலான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று (திங்கட்கிழமை) நடக்க இருக்கிறது.

இறந்த பெண்களின் குழந்தைகளுக்கு சுகாதார அடையாள அட்டைகள் வழங்கி தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதிகள் செய்து கொடுப்பது, அவர்களின் படிப்பு செலவு பொறுப்பை அரசே ஏற்பது மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பில் அவர்களது பெயரில் நிரந்தர வைப்பு கணக்கு ஏற்படுத்துவது போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்