ஊழல் கண்காணிப்பு அமைப்பான லோக்பாலின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்பங்களை மத்திய அரசு வரவேற்றுள்ளது.
லோக்பால் அமைப்பில் ஒரு தலைவர் மற்றும் 8 உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள். இதில் 4 இடங்கள் நீதித்துறையை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர்கள், மாநில அரசின் தலைமைச் செயலர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சக செயலாளருக்கு பிப்ரவரி 7-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை விசாரிக்க மத்திய அளவில் லோக்பால் அமைப்பும், மாநில அளவில் லோக்ஆயுக்தா அமைப்பும் ஏற்படுத்தப்படுகிறது.-பி.டி.ஐ.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago