வி.கே.சிங். ரூ.2 கோடி கேட்டு இளைஞர் மிரட்டுகிறார்: மனைவி பாரதியுடன் மத்திய அமைச்சர்

ரூ. 2 கோடி கேட்டு தன்னை ஒருவர் மிரட்டுவதாகவும், ரகசியமாக பதிவு செய்த உரையாடல்களை வைத் துக்கொண்டு தொடர்ந்து ‘பிளாக் மெயில்’ செய்துவருவதாகவும் மத்திய அமைச்சர் வி.கே.சிங்கின் மனைவி டெல்லி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

டெல்லி துக்ளக் ரோடு காவல் நிலையத்தில் கடந்த செவ்வாய் கிழமை அன்று, வி.கே.சிங்கின் மனைவி பாரதி சிங் புகார் ஒன்றை அளித்தார்.

தனது குடும்பத்துக்குப் பரிச்சயமான டெல்லியைச் சேர்ந்த பிரதீப் சவுகான் (27) என்பவர், கடந்த ஒரு வாரகாலமாக தொடர்ந்து தன்னைத் தொலைபேசியில் அழைத்து, ரூ.2 கோடி கேட்டு மிரட்டுவதாக பாரதி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

போலியாக சித்தரிக்கப்பட்ட வீடியோ மற்றும் ஆடியோ பதிவுகளை பிரதீப் சவுகான் தன் வசம் வைத்துக்கொண்டு, அதை வெளியிடாமல் இருக்க, ரூ.2 கோடி தருமாறு பிளாக்மெயில் செய்வதாக, பாரதி சிங்கின் வழக்கறிஞர் விஷ்வஜீத் சிங் தெரிவித்தார்.

மேலும், உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்துள்ள பிரதீப், தன் குடும்பத்தினரை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல், போலியான வீடியோ, ஆடியோக் களை வெளியிட்டு, தனது கணவ ரான அமைச்சர் வி.கே.சிங்கின் கவுரவத்தை கெடுக்கப்போவ தாகவும் பிரதீப் பிளாக்மெயில் செய்கிறார் என, பாரதி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் 384 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

வி.கே.சிங், ராணுவத் தளபதியாக பதவி வகித்து, 2012-ம் ஆண்டில் ஓய்வு பெற்றவர். பின்னர் பாஜகவில் இணைந்த அவர், வெளியுறவு விவகாரங்கள் துறை இணை அமைச்சராக உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE