கிறிஸ்தவ முறைப்படி வழங்கப் படும் விவாகரத்து சட்டப்படி செல்லாது. நீதிமன்றத்தில் வழங்கப்படும் விவாகரத்துக்கு மட்டுமே சட்ட அங்கீகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கர்நாடக கத்தோலிக்க சங்கத்தின் முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான கிளாரன்ஸ் பயஸ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இம்மனுவில், ‘கிறிஸ்தவர்களுக்கு திருமணங் களை அங்கீகரிக்கவும், அதை முறித்து விவகாரத்து அளிக்கவும் கிறிஸ்தவர்களுக்கான ‘கேனன் லா’ அதிகாரம் அளித்துள்ளது. அதன்படி, கிறிஸ்தவ தேவாலய நீதிமன்றங்களில் விவாகரத்து வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதற்கு சட்டப்படி அங்கீகாரம் அளிக்க மறுப்பதால், இந்த முறையில் விவாகரத்து பெற்று இரண்டாம் திருமணம் செய்தவர் கள், இந்திய குற்றவியல் சட்டத் தின் பிரிவு 494-ன் கீழ் தண்டிக் கப்படுகின்றனர்.
இதுதொடர்பான ஏராளமான வழக்குகள் பல்வேறு நீதிமன்றங் களில் நிலுவையில் உள்ளன. முஸ்லிம்களுக்கு அவர்களது மதச் சட்டத்தின்கீழ், மூன்று முறை ‘தலாக்’ சொன்னால், அதை விவாகரத்தாக ஏற்றுக் கொள்ளும் நீதிமன்றம், கிறிஸ்தவர்களுக்கு அவர்களது மத வழக்கப்படி வழங்கப்படும் விவாகரத்தை ஏன் ஏற்றுக் கொள்ளக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பியதுடன், கிறிஸ்தவர்களின் விவாகரத்தை அங்கீகரிக்க அனைத்து நீதிமன்றங் களுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இம்மனு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரம் 96-ம் ஆண்டு மோலி ஜோசப் மற்றும் ஜார்ஜ் செபஸ்டி யான் வழக்கிலேயே முடித்து வைக்கப்பட்ட ஒன்று.
கிறிஸ்தவ முறைப்படி விவா கரத்து பெற்றிருந்தாலும், அதற்கு நீதிமன்றம் அங்கீகாரம் அளித்தால் மட்டுமே அந்த விவா கரத்து சட்டப்படி செல்லும்’ என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து விட்டது. மேலும், இந்திய கிறிஸ்தவ திருமணச் சட்டம் 1872 மற்றும் விவாகரத்து சட்டம் 1869 ஆகியவை மட்டுமே சட்டப்பூர்வமானது. அந்த சட்டங் களை ‘கேனன் லா’ எனப்படும் தனிநபர் மதச்சட்டத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்தவ அமைப்புகள் மீறுவதற்கு அனுமதிக்க முடியாது’ என்று வாதிட்டார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் அடங்கிய அமர்வு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்புகளை ஆய்வு செய்தது. பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘கிறிஸ்தவ நீதிமன்றங் களில் வழங்கப்படும் விவாகரத்து சட்டப்படி செல்லாது. இந்த வகை யில் விவாகரத்து பெற்ற பின்னர் இரண்டாவது திருமணம் செய் தால், அவர்கள் குற்றம் செய்தவர் களாக கருதப்படுவார்கள்.
இத்தகைய விவாகரத்துகளை சட்டப்படி நீதிமன்றம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே அதற்கு அங்கீகாரம் உண்டு’ என்று தெரி வித்தனர். இதற்கிடையே மனுதாரர் கிளாரன்ஸ் பயஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சொலி சொரப்ஜி, ‘இந்த வழக்கை துரிதமாக நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை துரிதமாக விசாரிக்க உத்தரவு பிறப்பித்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago