ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா நாளை (திங்கள்கிழமை) பாஜக ஆதரவுடன் மாநிலங்களவையில் விவாதமின்றிகூட நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, "லோக்பால் மசோதாவில் போதுமான அளவிற்கு அனைத்துத் தரப்பு கருத்துக்களுக்கும் மதிப்பளித்து திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.
இம்மசோதாவுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் முழு ஆதரவு கொடுத்துள்ளன. முலாயம் சிங்கின் சமாஜ் வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. எனவே, மாநிலங்களவையில் விவாதமின்றிகூட மசோதா நாளை நிறைவேற்ற வாய்ப்புள்ளது" என்றார்.
முன்னதாக, ஊழலுக்கு எதிரான திருத்தப்பட்ட லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா மசோதாவை வெள்ளிக்கிழமை மாநிலங்களவையில் அமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார்.
இதனிடையே, வலுவான லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தனது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடந்துள்ளார்.
அதேவேளையில், ஊழலுக்கு எதிரான மிக முக்கிய ஆயுதமான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், மசோதாவை நிறைவேற்ற முழுமனதாக ஆதரவளிக்க பாரதிய ஜனதா கட்சி தயார் என அக்கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லியும் கருத்து தெரிவித்திருந்தனர்.
திருத்தபட்ட லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சமாக, மாநிலங்களில் லோக் ஆயுத்தா நீதிமன்றங்கள் அமைப்பதற்கான விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மேலும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் ஊழலில் ஈடுபட்டால் அவர்கள் மீது வழக்கு பதியும் வகையிலும் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago