குஜராத் சட்டசபையில் நேற்று ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
குஜராத் சட்டசபை நேற்று கூடியதும், பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயித்தது தொடர்பான விவகாரத்தில் மாநிலத்தில் ஆளும் பாஜகவை கண்டித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் விலை மிகவும் குறைவாக இருப்ப தாக குற்றம்சாட்டிய அவர்கள், பாஜக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி சபையின் மையப் பகுதிக்கு வந்து ரகளையில் ஈடு பட்டனர்.
அவர்களை இருக்கைக்கு திரும்புமாறு சட்டசபை தலைவர் கண்பத் வசாவா பலமுறை வலியுறுத்தினார். எனினும் அவர்கள் தொடர்ந்து கோஷமிட்டபடி இருந்தனர். இதையடுத்து ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 20 பேரை ஒருநாள் சஸ்பெண்ட் செய்வதாக சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு நீதி கிடைக்க போராடிய தங்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குஜராத் சட்டசபை கூட்டத் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago