பொது இடங்களில் மக்கள் இணையதள வசதியை பயன்படுத்தும் வகையில் இலவச ‘வைஃபை' திட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக கர்நாடக அரசு பெங்களூரில் தொடங்கியுள்ளது. இத்திட்டத்துக்கு ‘நம்ம வைஃபை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பெங்களூரில் 5 இடங்களில் இத்திட்டத்தை மாநில தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் நேற்று தொடங்கி வைத்தார்.
பெங்களூர் மகாத்மா காந்திசாலையில் (எம்.ஜி. ரோடு) ‘நம்ம வைஃபை' திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.ஆர்.பாட்டீல் பேசுகையில், ''இந்தியாவின் ஐடி தலைநகரமாகவும், சிலிக் கான் சிட்டியாகவும் திகழும் பெங்களூரில், பொதுமக்கள் அதிகளவில் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். இந்தியாவிலே இணையதளம் மூலம் அதிக சேவைகளை பெறுவதிலும் பெங்களூர்வாசிகள் முன்னணியில் இருக்கிறார்கள். அலுவலகத்திலும் வீட்டிலும் மட்டுமில்லாமல் பொது இடங்களி லும் அவர்களுக்கு இணையதள வசதி கிடைக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
எனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல்வர் சித்தராமையா இதற்கான ஆணையை வழங்கினார். முக்கியமான 5 இடங்களில் இலவச 'வை-ஃபை' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி எம்.ஜி. ரோடு, மெட்ரோ ரயில் நிலையம், பிரிகேட் ரோடு, இந்திரா நகர், கோரமங்களா ஆகிய இடங்களில் இலவசமாக இணையதள வசதியைப் பயன்படுத்தலாம்.
இந்த இணைய சேவைத் திட்டம் ஓரிரு ஆண்டு களில் மைசூர், ஹூப்ளி, மங்களூர் என கர்நாடகா முழுவதும் விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் கர்நாடகாவின் இளை ஞர்களும் பொதுமக்களும் தகவல் தொழில் நுட்ப துறை யின் வளர்ச்சிப்பாதையில் பயணிப் பார்கள்' 'என்றார்.
ஒரு நாளில் ஒரு வாடிக்கை யாளர் இதனை அரை மணிநேரம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் வேகம் 512 கே.பி.பி.எஸ்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
11 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago