ஹைதராபாத்தில் ரூ.9.90 லட்சம் போலி நோட்டுகள் பறிமுதல்

By என்.மகேஷ் குமார்

ஹைதராபாத்தில் நேற்று ரூ.9.90 லட்சம் மதிப்புள்ள போலி புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த போலி ரூபாய் நோட்டு களையும் பறிமுதல் செய்தனர்.

ஹைதராபாத் மல்காஜ்கிரி பகுதியில் நோட்டுப் புத்தக கடை நடத்தி வருபவர் ஷேக் மவுலா அலி (34). இவர் நேற்று காலை ஏஎஸ் ராவ் நகரில் உள்ள அலகாபாத் வங்கியில் ரூ.9.90 லட்சத்தை தனது கணக் கில் செலுத்த வந்தார். அந்தப் பணத்தை பெற்றுக்கொண்ட காசாளர் ரூபாய் நோட்டுகளின் மேலே இந்திய குழந்தைகள் வங்கி என்ற பெயர் இடம் பெற்றிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீ ஸாருக்கு தகவல் அளிக்கப்பட் டது. அதன் அடிப்படையில் வங்கிக்கு விரைந்து வந்த போலீஸார் போலி ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த முயன்ற ஷேக் மவுலாவை கைது செய்தனர். மேலும், அந்த போலி ரூபாய் நோட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்