சதானந்த கவுடாவின் துறையை மாற்றியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு

மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த‌ சதானந்த கவுடாவின் துறையை மாற்றியதன் மூலம் பாஜக கர்நாடக மக்களுக்கு அநீதி இழைத்து விட்டது என காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை காங்கிரஸ் கட்சியின் தலை வருமான மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநில பாஜகவை சேர்ந்த சதானந்த கவுடாவுக்கு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருப்பது அரசி யல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகத்துக்கு அநீதி

கர்நாடக மாநிலம் கலபுர்கியில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜூன கார்கே செய்தியாளர்களிடம் திங்கள் கிழமை கூறியதாவது: பிரதமர் மோடியின் 5 மாத கால ஆட்சி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட எந்த புதிய திட்டங்களும் நடைமுறைக்கு வரவில்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.அதனை மோடி செயல்படுத்தியது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டிருக் கிறது.

முதலில் கர்நாடகத்தை சேர்ந்த சதானந்தகவுடாவுக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டது.தற்போது அவரிடம் இருந்து அந்த துறை பறிக்கப்ப‌ட்டு, சுரேஷ் பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மோடி யின் இந்த அணுகுமுறை ஏற்கத்தக்க தல்ல. இந்த விவகாரத்தில் பாஜக அரசு கர்நாடகத்திற்கு அநீதி இழைத்துவிட்ட‌து.

சதானந்தகவுடா ரயில்வே துறையின் அமைச்சராக நீடித்திருந்தால், கர்நாடகத்துக்கு ரயில்வே துறையில் முக்கியத்துவம் கிடைத்திருக்கும். தற்போது அவரது துறை மாற்றப்பட்டதால் கர்நாடக மக்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளனர்''என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

இந்தியா

31 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

மேலும்