கோஷ்டி பூசல் வேண்டாம்: தமிழக காங்கிரஸாருக்கு சோனியா அறிவுரை

By பிடிஐ

தமிழக காங்கிரஸ் புதிய தலை வராக நியமிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் தலை மையில் தமிழக காங்கிரஸ் பிரதிநிதிகள் நேற்று டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினர். முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் காங்கிரஸிலிருந்து பிரிந்து தனிக் கட்சி அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

சுமார் ஒரு மணி நேரம் நடை பெற்ற இந்த சந்திப்பின் போது, தமிழக காங்கிரஸார் கோஷ்டி பூசலை கைவிட்டு, ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். கட்சியை வலுப்படுத்தி மாநில சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக வேண்டும் என்று சோனியா காந்தி அறிவுரை கூறினார்.

இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன், மாநிலத் தில் காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என்று சோனியா காந்தியிடம் உறுதியளித்துள்ளோம். வாசன் அணிக்கு சென்றிருப்பவர்கள் ஒரு சிலர்தான் என்று தெரிவித்தார்.

தமிழகத்தை சேர்ந்த முன் னாள் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப் பன், தமிழக காங்கிரஸ் முன் னாள் தலைவர்கள் குமரி அனந்தன், தங்கபாலு, முன் னாள் எம்.பி.க்கள் கோவை பிரபு, கிருஷ்ணசாமி, முன்னாள் எம்எல்ஏக்கள் எச்.வசந்த குமார், யசோதா, ஜெயக்குமார், சு.திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்