ஆஸ்திரேலிய பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்: பிரதமர் மோடி

By ஐஏஎன்எஸ்

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டுக்காக தான் மேற்கொள்ள இருக்கும் பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் இம்மாதம் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடக்க உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது, "இந்தியாவில் உள்ள வாய்ப்புகள் குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துக்கூற ஒரு வாய்ப்பாக ஜி-20 உச்சி மாநாடு திகழும். இந்த பயணம் வரலாற்று சிறப்புமிக்கதாக அமையும்.

ஆஸ்திரேலியாவில் உயர்மட்ட தலைவர்களுடன் நான் பேச்சு நடத்தவும், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தவும் எனக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பை சிறப்புடன் பார்க்கிறேன்" என்று தெரிவித்தார்.

மேலும், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை பிரதமர் மோடி இந்த பயணத்தின் மூலம் பெறுகிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

58 mins ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்