வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக சமாஜ்வாதி கட்சி இடையில் நேரடிப் போட்டி நிலவும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறினார்.
இதுகுறித்து, கோரக்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முலாயம் பேசியதாவது:
வரும் மக்களவை தேர்தலில் மூன்றாவது அணி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக் கும். இதில் சமாஜ்வாதி கட்சி மிகப்பெரிய கட்சியாக இருக்கும்.
உ.பி.யில் 80 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் எங்கள் கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்று வலுவான கட்சியாக உருவெடுக்கும். உ.பி. போல் வேறு எந்த மாநிலத்திலும் அதிக தொகுதிகள் இல்லை.
மதவாத சக்திகளுக்கு எதிராக எவரும் போட்டியிடலாம். ஆனால் சமாஜ்வாதி கட்சி மட்டுமே இதில் வெற்றி பெறும். இதற்கு முன் பல தேர்தல்களில் இவ்வாறு நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்.
வரும் மக்களவை தேர்தலில் பாஜக சமாஜ்வாதி கட்சி இடையில்தான் போட்டி நிலவும். குஜராத் வளர்ச்சி பற்றி தவறான தகவல்களை அளித்து நரேந்திர மோடி மக்களை தவறாக வழி நடத்துகிறார். அவருக்கு வரும் தேர்தலில் தகுந்த பதிலடி கிடைக்கும்” என்றார் முலாயம்.
முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், “பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி நாட்டின் முன்னோடி மாநிலமாக உ.பி. உள்ளது. கடந்த 2 ஆண்டு களில் வளர்ச்சி மற்றும் நல்வாழ் வுத் திட்டங்கள் மூலம் மக்களின் பணம் மக்களிடமே அளிக்கப்பட் டுள்ளது” என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago