மீண்டும் மத்திய அமைச்சரானார் சிவசேனா முன்னாள் நிர்வாகி சுரேஷ் பிரபு: பதவியேற்புக்கு முன்பு பாஜகவில் இணைந்தார்

By பிடிஐ

சிவசேனா கட்சியின் முன்னாள் நிர்வாகி சுரேஷ் பிரபு (61) மத்திய அமைச்சராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக அவர் பாஜகவில் இணைந்தார்.

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையி லான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்த பிரபு நேற்று காலை முறைப்படி பாஜகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார்.

இந்நிலையில், தாங்கள் பரிந் துரை செய்த அனில் தேசாய்க்கு அமைச்சர் பதவி வழங்கப்படாத தால் பதவியேற்பு விழாவை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியான சிவசேனா புறக்கணித்தது.

மகாராஷ்டிராவில் கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக, பாஜக, சிவசேனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வரு கிறது. இந்த சூழ்நிலையில், பிரபு பாஜகவில் இணைந்துள்ளதால் மத்திய அரசிலிருந்து வெளி யேறுவது குறித்தும், மகாராஷ்டிர அரசில் இணையாமல் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வது குறித்தும் உத்தவ் தாக்கரே ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற வார்டன் இந்தியா பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பேச மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் அது ரத்து செய்யப்பட்டதற்கு பிரபு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், ஒருங்கிணைந்த மின்சாரம், நிலக்கரி மற்றும் புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி ஆலோசனைக் குழு உறுப்பினர் பதவியை மோடி சுரேஷுக்கு அளித்திருந்தார். மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டில் பிரதமருக்கு உதவியாக இருக்க சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் ராஜாபூர் மக்களவை தொகுதியில் 4 முறை (1996-2009) போட்டியிட்டு வெற்றி பெற்ற சுரேஷ், கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலில் தோல்வி அடைந்தார்.

கடந்த 1998 முதல் 2004-ம் ஆண்டு வரை வாஜ்பாய் தலைமையிலான அரசில் தொழில், சுற்றுச்சூழல் மற்றும் வனம், உரம் மற்றும் ரசாயனம், மின்சாரம், கனரக தொழில் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் ஆகிய துறைகளின் அமைச்சராக இருந்துள்ளார்.

மின் துறையை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகளுக்காக சுரேஷுக்கு பாராட்டு குவிந்தன. நதிகள் இணைப்பு திட்டக் குழுவின் தலைவராகவும் சுரேஷ் இருந்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்