அம்பரீஷ் உடல்நிலை முன்னேற்றம்: மனைவி சுமலதா தகவல்

By இரா.வினோத்

சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகரும் கர்நாடக வீட்டு வசதித்துறை அமைச்சருமான அம்பரீஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக அவருடைய மனைவி சுமலதா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

அம்பரீஷ் சிறுநீரகக் கோளாறு மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 21-ம் தேதி பெங்களூர் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அங்கு 8 நாட்கள் 10 பேர் அடங்கிய மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தபோதும் அம்பரீஷின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில், நெருங்கிய நண்பரும் நடிகருமான ரஜினிகாந்த் ஆலோசனையின்படி கடந்த சனிக்கிழமை சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் அம்பரீஷ் அனுமதிக்கப்பட்டார்.

அம்பரீஷின் உடல்நிலை குறித்து அவருடைய‌ மனைவி சுமலதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ''எனது கணவரின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நுரை யீரலில் இருந்த கிருமி களை மருத்துவர்கள் முழுமையாக அகற்றி யுள்ளனர். அவர் விரைவில் குண மடைந்து பெங்களூர் திரும்புவார். எனவே அவருடைய ரசிகர்களும் தொண்டர்களும் பீதியடைய வேண்டாம். அவர் குணமடைய அமைதியான முறையில் பிரார்த்தனை செய்யுங்கள்'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்