ஒபாமாவின் மத சகிப்புத் தன்மை கருத்துக்கு இந்திய சிறுபான்மையினர் ஆதரவு

By ஏஎஃப்பி

இந்தியாவில் தற்போது மத சகிப்புத்தன்மை இல்லாததை காந்தியடிகள் காண நேர்ந்தால், அவர் அதிர்ச்சிக்குள்ளாகி இருப்பார் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறிய கருத்தை சிறுபான்மையினர் அமைப்புகள் வரவேற்றுள்ளன.

தன் இந்தியப் பயணம் குறித்து வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமா இது தொடர்பாக பேசும்போது, "மகாத்மா காந்தி மீது இந்தியா வைத்திருக்கும் அதே நன்மதிப்பை அமெரிக்காவும் கொண்டுள்ளது.

மிக அற்புதமான, பன்முகத்தன்மை கொண்ட அழகான நாடாக இந்தியா உள்ளது. அங்கு பார்த்த ஒவ்வொரு கலாச்சாரத்தையும் கண்டு நானும் மிஷேலும் வியப்படைந்தோம்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு மதக் கோட்பாடுகளும், அவர்களது கலாச்சார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறது. இந்தியாவில் பலதரப்பட்ட மத நம்பிக்கைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சகிப்புதன்மையின்மையை இந்தியாவின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தி கண்டிருந்தால் அதிர்ந்து போயிருப்பார்" என்றார் ஒபாமா.

ஒபாமாவின் இந்தக் கருத்தை வரவேற்ற மனித உரிமைகளுக்கான ஐக்கிய கிறித்துவ கூட்டமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜான் தயால் கூறும்போது, “இந்தியாவில் சரிந்து வரும் மதசகிப்புத் தன்மை பற்றிய சங்கடங்கள் அதிகரித்து வருகிறது, இது குறித்த ஒபாமாவின் கருத்து மிக முக்கியமானது, வரவேற்கத்தக்கது.

“இந்தியாவில் வசிக்கும் மற்ற மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையினரின் அச்சங்களை தற்போது உலகம் முழுதும் பேசக்கேட்கிறோம். ஒபாமா, தன்னால் இயன்றவரை மிகவும் நேரடியாக இதனை தெரிவித்துள்ளார்.

ஃபாதர் டொமினிக் கூறும்போது, "பல்வேறு மதத்தினரும் சண்டையிட்டுக் கொள்கின்றனர் என்ற நிஜத்தை இந்தியா எதிர்கொள்ள வேண்டும். ஒபாமா கூறியதை யாரும் மறுக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அனைவருக்குமான உண்மையைத்தான் அவர் கூறியுள்ளார். இந்தியாவில் இதுதான் எதார்த்தம்." என்று என்.டி.டிவி. தொலைக்காட்சியில் அவர் தெரிவித்தார்.

'அபாயகரமான போக்கு'

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முஸ்லிம் மதகுரு மிர்வைஸ் உமர் பரூக் கூறும்போது, “பிரிவினை வாத இந்துத்துவா சக்திகள் இந்தியாவில் வலுவடைந்து வருகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. இது ஒரு அபாயகரமான போக்கு என்று ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

46 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்