ஆபாச விளம்பரங்கள்: கூகுள், யாஹு நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

By ஏஎன்ஐ

தேடுதல் இயந்திரமான கூகுள், யாஹு உள்ளிட்ட நிறுவனங்கள் ஆபாச விளம்பரங்களை தங்களது இணையதளங்களில் வெளியிட்டு வருவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பட்டியலிட்டு மனு அளிக்கும்படி மத்திய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.

இணையதளங்களில் பாலியல் கருவிகள், மருத்துவமனைகள் போன்ற தகவல்கள் அடங்கிய விளம்பரங்களை கூகுள், யாஹு போன்ற தேடுதல் இயந்திரங்களில் இலவசமாக காண முடிகிறது. இதை தடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சாபு மேத்யூ என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் இத்தகைய ஆபாச விளம்பரங்களை தொகுத்து வழங்கி வரும் கூகுள், யாஹு உள்ளிட்ட தேடுதல் இயந்திரங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ‘‘சட்டத்தை இந்த இணையதள நிறுவனங்கள் தொடர்ந்து மீறி வருகிறதா? இத்தகைய விளம்பரங்களை முற்றிலும் தடுக்க முடியாதா? விளம்பரம் என்ற பெயரில் வெளியாகும் இத்தகைய சட்டவிரோத நடவடிக்கையை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது.

எனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு முக்கியமான தேடுதல் இயந்திர நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். அத்துடன் ஆபாச விளம்பரங்களை உடனடியாக எப்படி தடுத்து நிறுத்துவது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டது. இவ்வழக்கின் அடுத்த விசாரணை வரும் 25-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்