3வது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது: ஷிண்டே உறுதி

காஷ்மீர் பிரச்சினையில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை அனுமதிக்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே உறுதிபட தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினையில், அமெரிக்கா தலையிட்டால் சுமுக தீர்வு காண முடியும் என, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் கூறியிருந்தார். மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள ஷிண்டே: காஷ்மீர் விவகாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான இருதரப்பு பிரச்சினை. இதில், மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார். ஜவஹர்லால் நேரு காலந்தொட்டே இந்தியா காஷ்மீர் பிரச்சினையில், இந்த நிலைப்பாட்டை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE