பிஹார் சுகாதாரத்துறை அமைச்சரும், லாலு பிரசாத் யாதவ் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு எதிராக மதச்சார்பின்மையை வலியுறுத்தும் தர்மனிபேக்ஷா சேவக் சங் (டி.எஸ்.எஸ்.) என்ற இயக்கத்தை அறிமுகம் செய்துள்ளார்.
“இது ட்ரெய்லர் மட்டுமே, முழுப் படம் இன்னும் வரவில்லை” என்று கூறியுள்ளார் தேஜ் பிரதாப்.
பிஹார் தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களைச் சந்தித்த தேஜ் பிரதாப் கூறும்போது, “இன்றைய நிலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவெறியைப் பரப்பி வருகிறது, தன்னுடைய பிரிவினை வாத கொள்கையை நாடு முழுதும் பரப்பி வருகிறது. ஆனால் எங்களது மதச்சார்பின்மை இயக்கம் அதனை எதிர்த்து தொடங்கப்பட்டுள்ளது.
உ.பி.முதல்வர் தொடங்கிய இந்து யுவ வாஹினி போன்ற அமைப்புகள் பிஹாரிலும் நுழைந்துள்ளது. எனவே அதற்கு எதிராக வலுவாக டி.எஸ்.எஸ். இயக்கத்தை முன்னிறுத்துகிறோம், இது அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் இயக்கமாகும்” என்றார்.
இந்த இயக்கம் குறித்து மூத்த பாஜக தலைவர் சுஷில் குமார் மோடி கூறும்போது, “இவரது அமைப்பு சிறப்புற வாழத்துகிறோம், ஆனால் முதலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை அவர் அதில் சேர்ந்து ஓராண்டுக்காவது பார்க்க வேண்டும். அரைக் கால்சட்டை அணிந்து பாரத் மாதா கி ஜெய் உச்சாடனம் செய்ய வேண்டும்” என்றார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக தேஜ் பிரதாப், “அரை கால்சட்டை அணிபவர்கள் அரை-மனது கொண்டவர்கள் என்பதையும் கவனிக்க வேண்டும்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago