நாடு முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து வழக்கறிஞர் எம்.எல்.சர்மா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் மற்றும் நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், “நாடு முழுவதும் 29.99 லட்சம் தொண்டு நிறுவனங்கள் செயல் படுகின்றன. இதில் 80 சதவீத தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது.
பெரும்பாலான நிறுவனங்களை ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நடத்து கின்றனர். அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி, தவறான வழிகளில் செயல்படு கின்றனர்” என்று வாதிடப்பட்டது.
இதைக்கேட்ட தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், “தொண்டு நிறுவனங்களுக்கு உலகம் முழுவதும் இருந்து கணக்கில் காட்டப்படாமல் நிதி வருகிறது. இதை நினைத்தால் மனதில் பெரும் அச்சம் ஏற்படுகிறது. அவர்களுக்கு வரும் நிதியை தடுக்க போதுமான சட்டம் இல்லை என்பது வேதனை அளிக்கிறது.
ஒரு சங்கத்தைப் பதிவு செய்து கொண்டு யார் வேண்டுமானா லும் தொண்டு நிறுவனமாக செயல் படலாம் என்ற நிலை உள்ளது. அவர்களைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் எந்த சட்டப் பூர்வ அமைப்பும் இல்லை. இந்த நிலையை மத்திய அரசு கட்டுப்படுத்தாவிட்டால் எதுவுமே செய்ய முடியாது.
எனவே, தேசிய சட்ட ஆணையம், எந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டு வந்து தொண்டு நிறுவனங்களை வரைமுறைக்கு கொண்டு வரலாம், அவர்களுக்கு வரும் நிதியைக் கண்காணிக்கலாம் என்று மத்திய அரசுக்குப் புதிய சட்ட வரைவை பரிந்துரை செய்ய வேண்டும்” என்று சட்ட ஆணையத்துக்கு அறிவுரை வழங்கி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
இந்தியா
46 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago