ராஜஸ்தான் மாநிலம் சிகார் மாவட்டத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிகார் மாவட்டம் கன்கரா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு உள்ளூர் கிராமப் பஞ்சாயத்து அளித்த தீர்ப்பின்படி இந்த கொடூரச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜசமந்த் என்ற கிராமத்திலும் ஒரு பெண்ணுக்கு நிர்வாண ஊர்வல தண்டனை வழங்கப்பட்டது. அச்சம்பவத்தின் தாக்கம் விலகுவதற்குள் மீண்டும் அப்படி ஒரு கொடூரம் நடந்துள்ளது.
இது குறித்து போலிஸ் எஸ்.பி. ரவி கூறியதாவது, "பாதிக்கப்பட்ட பெண்ணின் 10 வயது மகள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து பெண்ணின் கணவரை கைது செய்துள்ளோம். கழுதை மீது ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்டபோது அவர் வாயில் துணியை திணித்துள்ளனர். இதனால் அந்தப் பெண் மயங்கி விழுந்துள்ளார்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago