பாலியல் தொழிலாளர்கள் ஓய்வூதியக் கோரிக்கை

By செய்திப்பிரிவு

பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும் என்று அகில இந்திய பாலியல் தொழிலாளர்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்த கூட்டமைப்பின் தேசிய தலைவர் பாரதி டே செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கை:

பாலியல் தொழில் அங்கீகரிக்கப் படாத துறையாக இருப்பதால் ஓய்வூதிய திட்ட வரம்புக்குள் இல்லை.

பாலியல் தொழிலாளர்கள் 40 முதல் 45 வயதுக்குள் இத்தொழிலில் இருந்து ஓய்வுபெறும் நிலையில் அவரும், அவரது குடும்பத்தினரும் வசிப்பிடமும் வாழ்வாதாரமும் இல்லாமல் தவிக்கின்றனர். எனவே பாலியல் தொழிலாளர்களுக்கு ஓய் வூதியம் வழங்கப்படவேண்டும். இதுகுறித்து அரசியல் கட்சிகள் தங்கள் நிலையை தேர்தல் அறிக்கையில் தெளிவுபடுத்த வேண்டும்.

பாலியல் தொழிலாளர்கள், தங்கள் குடும்பத்தை விட்டு இடம் மாறி வாழ்வதால், அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைப்பதில்லை. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்