ஐயப்ப மாலை அணிந்ததால் மாணவனை அடித்த ஆசிரியை

சீருடை அணியாமல் கருப்பு ஆடை, ஐயப்ப மாலை அணிந்து வந்த மாணவனை வகுப்பில் அனுமதிக்காமல் பள்ளி ஆசிரியை அடித்து வீட்டுக்கு அனுப்பினார். இதை கண்டித்து மாணவனின் பெற்றோர், உறவினர்கள் நேற்று பள்ளியின் ஜன்னல் கண்ணாடிகள், மேஜை, நாற்காலிகளை உடைத்தனர். பள்ளியின் முன்பு ஆர்ப்பாட் டத்திலும் ஈடுபட்டனர்.

ஆந்திர மாநிலம், கர்னூலில் உள்ள ஜே.எம்.ஜி. தனியார் பள்ளியில் படிக்கும் 6-ம் வகுப்பு மாணவன் நேற்று ஐயப்ப மாலை அணிந்து பள்ளிக்குச் சென்றான். வகுப்பு ஆசிரியை, ஐயப்ப மாலை அணிந்து பள்ளிக்கு வரக்கூடாது என கூறி, வீட்டிற்கு சென்று பள்ளி சீருடை அணிந்து வரும்படி கூறினார்.

இதற்கு மாணவன் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த ஆசிரியை, மாணவன் அணிந்திருந்த ஐயப்ப மாலையை அறுத்து வீசினார். பின்னர் அந்த மாணவனை பிரம்பால் அடித்தார். இதனால் அழுதுகொண்டே அந்த மாணவன் வீட்டுக்கு சென்று நடந்த விஷயங்களை பெற்றோருக்கு தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உறவினர், இந்து சமய அமைப்பினர் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அந்த பள்ளிக்கு சென்று நிர்வாகத்திடம் முறையிட்டனர்.

மாலை அணிந்திருந்த மாணவனை அடித்ததாலும் இந்துக்களின் மனம் புண்படி நடந்து கொண்டதாலும், ஆசிரியை மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கு பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்