உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் நேற்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாடினார்.
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.எஸ்.கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி இரண்டு முறை வாய்ப்பளித்தும் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகாததால், அவருக்கு எதிராக வாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், தீபக் மிஸ்ரா, சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்கூர், பி.சி.கோஸ், குரியன் ஜோசப் ஆகிய ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நீதிபதி கர்ணன் ஆஜரானார். உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராவது இதுவே முதல்முறை. அவர் ஆஜரானதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சக நீதிபதிகள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு நிபந்தனை யற்ற மன்னிப்பு கேட்கிறீர்களா? குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வாபஸ் பெறுகிறீர்களா? என்று கேட்டனர்.
அப்போது நீதிபதி கர்ணன், என்னை சக நீதிபதிகள் ஒதுக்கு கின்றனர். என் வீட்டுக்கு போலீஸ் அனுப்பி என்னை ஏன் அவமானப் படுத்தினீர்கள். இதனால், மக்கள் மத்தியில் எனது கவுரவம் பாதிக் கப்பட்டுள்ளது. நான் என்ன தீவிர வாதியா? என்னை அவமானப் படுத்துவது நீதித்துறையையே அவமானப்படுத்துவது போல் இல்லையா? என்று வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், உங்களை நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினோம். நீங்கள் ஆஜராகாததால், வாரன்ட் பிறப் பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூறினர். அதற்கு முதலில் என்னிடம் இருந்து பறிக்கப்பட்ட நீதிமன்ற பணிகளை எனக்கு வழங்குங்கள் என்று நீதிபதி கர்ணன் கூறினார். அப்போது தலைமை நீதிபதி, நீங்கள் இந்த வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால், வழக்கு வேறு திசைக்குச் செல்லும். இல்லாவிட்டால், வழக்கறிஞர் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முழுமையாக விசா ரணைக்கு உட்படுத்தப்பட்டு தீர்ப்பளிக்கப்படும் என்றார்.
என்னிடம் இருந்து நீதிமன்றப் பணிகள் பறிக்கப்பட்டுள்ளதால், நான் மனதளவில் பாதிக்கப்பட் டுள்ளேன் என்று கர்ணன் தெரி வித்தார். அதற்கு நீதிபதிகள் உங்கள் மீதான குற்றச்சாட்டு களுக்கு நான்கு வாரங்களுக்குள் எழுத்துமூலம் பதிலளிக்க வேண்டும். மனநிலை பாதிக்கப்பட் டிருப்பதாக சொன்னால், அதற்கான மருத்துவ சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். அப்போது, தேவை யில்லை; என்னை இப்போதே கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று நீதிபதி கர்ணன் வாக்குவாதம் செய்தார். இதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணையை மே 1-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
21 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago