தேர்தல் வாக்குறுதிகளும் நடத்தை விதிகளுக்கு உட்பட்டவை- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

By ஆர்.ஷபிமுன்னா

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் உட்பட்டவை என அறிவித்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளில் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளையும் கொண்டுவர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இது தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், அதற்கான நடத்தை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும், கடந்த தேர்தல்களில் தேர்தல் ஆணையத்துக்கு வந்த புகார்களின் அடிப்படையில் சில நடத்தை விதிமுறைகளை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலாளர் கே.அஜய்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலவசப் பொருள்கள் விநியோகம் என்பது மக்களைக் கவருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. இது மிகப்பெருமளவில் சுதந்திரமான நியாயமான தேர்தலின் வேரையே ஆட்டிவிடும்; தேர்தலில் போட்டியிடும் அனைவருக்கும் போட்டிக்கான சமதளத்தை உருவாக்கவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கட்சிகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, கட்சிகள் சில நெறிமுறைகளை கடைப்பிடிக்கவேண்டும். அரசிய லமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள கொள்கைகளுக்கு எதிராக தேர்தல் அறிக்கைகளில் எதுவும் இருக்கக்கூடாது. இதர தேர்தல் விதிமுறைகளுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டும்.

நலத் திட்டங்களுக்கான வாக்கு றுதிகளுக்கு ஆட்சேபணை இல்லாத போதும், கட்சிகள் தேர்தல் நடைமுறை யின் தூய்மையைப் பாதிக்கக் கூடிய வகையிலும் வாக்காளர்கள் மீது அளவுக்கு அதிகமான வகையில் செல்வாக்கு செலுத்தும் வகையில் எதுவும் இல்லாமலும் பார்த்துக் கொள்ள

வேண்டும். வாக்குறுதிகளுக்கான நியாயத்தையும், அதற்குத் தேவையான நிதியைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் சுட்டிக்காட்ட வேண்டும். நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகள் மீது மட்டுமே வாக்காளர்களின் ஆதரவைக் கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

மேலும்