டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேரை பதவி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) உறுப்பினர்கள் கடந்த ஜனவரி 30-ம் தேதி நியமிக்கப்பட்டனர். இந்த நியமனம் அவசர கதியில் தகுதி யில்லாதவர்களுக்கு வழங்கப் பட்டுள்ளது என்று கூறி, திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் வி.ராமமூர்த்தி, ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுசாமி, எம்.மாடசாமி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்ரமணியன், புண்ணியமூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேர் நியமனம் செல்லாது என்று கடந்த டிசம்பர் 22-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக யாரை நியமிக்க வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை மாநில அரசுக்கே விடப்பட வேண்டும் என்று வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ‘மாநில அரசு முடிவு செய்யலாம். அதேசமயம், அந்தப் பதவியின் நிலையை கருத்தில் கொண்டு, அப்பதவிக்கு அவர்கள் பொருத் தமானவர்களாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர் களைத் தேர்வு செய்பவர்கள் அப் பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக் கையைப் பெற்றவர்களாக இருப்ப தும் அவசியம்’ என்று தெரிவித் தனர். உறுப்பினர்கள் 11 பேரை பதவி நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், புதிய உறுப்பினர்களைச் சட்டத்திற்கு உட்பட்டு தமிழக அரசு தேர்வு செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்ட னர்.
அரசுப் பணியாளர்களைத் தேர்வு செய்பவர்கள் அப்பழுக்கற்றவர்களாக இருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்களாக இருப்பதும் அவசியம்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago