நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்: ‘எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் செயல்படுவோம்’ - மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேட்டி

By பிடிஐ

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி களின் ஒத்துழைப்புடன் செயல் படுவோம் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறி யுள்ளார். நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத்தொடர் வரும் 24-ம் தேதி தொடங்கி டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

வரும் 24-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பல்வேறு விவகாரங் கள் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் பங்கேற்கும் வகை யில், அவர்களின் ஒத்துழைப்புடன் செயல்படுவோம். இக்கூட்டத் தொடரில் மிகவும் ஆக்கபூர்வமான முறையில் விவாதம் நடைபெறும் என நம்புகிறோம்.

நாங்கள் எங்களின் கடமையை செய்கிறோம். அதேபோன்று, எதிர்க்கட்சிகள் அவர்களின் கடமையை செய்ய வேண்டும். அரசு தனது வழியில் செயல் படும். அதை விமர்சித்து தங்கள் தரப்பு கருத்தை எதிர்க்கட்சியினர் தெரிவிக்கலாம்.

இதுதான் ஜனநாயகத்துக்கு அழகு. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு முக்கிய இடம் உள்ளது. அவர்கள் விவாதிக்கவும் செய்யலாம், வெளிநடப்பும் செய்யலாம்.

இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 60 மசோதாக்கள் பற்றிய முக்கிய விவாதங்கள் நடைபெறவுள்ளன.

மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்கு அமோக ஆதரவு அளித்த மக்கள், சமீபத்திய இரு மாநில சட்டசபைத் தேர்தல் களிலும் தங்களின் ஆதரவை அளித்துள்ளனர். இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

முன்னதாக வெங்கய்ய நாயுடு முன்னிலையில் நாடாளுமன்ற விவகாரத்துக்கான இணை அமைச்சர்களாக முக்தர் அப்பாஸ் நக்வியும், ராஜீவ் பிரதாப் ரூடியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்