மோடிக்கு அவகாசம்: தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. கடிதம்

By செய்திப்பிரிவு

சத்தீஸ்கர் தேர்தல் பிரச்சாரம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக நரேந்திர மோடி விளக்கமளிக்க கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. கடிதம் எழுதியுள்ளது.

சத்தீஸ்கரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியை ரத்தக்கறை படிந்த கை என்று விமர்சனம் செய்ததிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சி, தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தது. நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.

இதனையடுத்து, தேர்தல் ஆணையம் மோடிக்கு நோட்டீஸ் அனுப்பியது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமாக கைச் சின்னத்தைக் குறித்து அவதூறாகப் பேசியதாக இது குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது. நவ.16ம் தேதி மாலை 5 மணிக்குள் இது குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் மோடி பரபரப்பாக இருப்பதால் இன்னும் ஒரு வார காலம் அவகாசம் தேவை என தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் பா.ஜ.க. குறிப்பிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்