ஜி.எஸ்.எல்.வி. டி-5 ஜனவரி தொடக்கத்தில் ஏவப்படும்: இஸ்ரோ

By செய்திப்பிரிவு

ஜி.எஸ்.எல்.வி. டி-5 , ராக்கெட் ஜனவரி முதல் வாரத்தில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினுடன் ஜி.எஸ்.எல்.வி. டி-5 கடந்த ஆகஸ்ட் மாதம் 19-ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ராக்கெட்டின், இரண்டாவது நிலையில் எரிபொருளில் கசிவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக, ராக்கெட் ஏவுவது தள்ளிவைக்கப்பட்டது.

அதன் பின்னர் கோளாறுகள் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் சீரமைப்புப் பணிகள் நிறைவு பெற்றுவிட்டதால், அடுத்த மாதம் (ஜனவரி-2014) முதல் வாரத்தில் ஜி.எஸ்.எல்.வி. டி-5விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், உறுதிப்படுத்தப்பட்ட தேதியும், நேரமும் பின்னர் அறிவிக்கப்படும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

1 day ago

மேலும்