திருமணத்தின்போது கண்டிப்பாக மாட்டிறைச்சி உணவு பரிமாற வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் விடுத்த கோரிக்கையை ஏற்க மறுத்து திருமணத்தையே பெண் வீட்டார் நிறுத்தி விட்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் உள்ள தரியாகார்க் கிராமத்தில் திருமணத்தின்போது விருந்தினர்களுக்குக் கண்டிப்பாக மாட்டிறைச்சி உணவு வகைகளைச் சமைத்துப் பரிமாற வேண்டும் என மாப்பிள்ளை வீட்டார் கூறியுள்ளனர்.
இல்லாவிட்டால் திருமணம் நின்றுவிடும் என பெண் வீட்டாரிடம் அவர்கள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர். மேலும் வரதட்சணையாக கார் வாங்கித் தருமாறும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டதாகத் தெரிகிறது.
ஆனால் மாட்டிறைச்சி உணவு பரிமாற முடியாது என பெண் வீட்டார் உறுதியாக இருந்தனர். இதற்கு மாப்பிள்ளை வீட்டார் ஒத்துக்கொள்ளாததால் வேறு வழியின்றி திருமணத்தையே நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு பெண் வீட்டார் தள்ளப்பட்டனர்.
இதுபற்றி மணப்பெண்ணின் தாய் கூறுகையில், 'திருமணத்தின்போது மாட்டிறைச்சி உணவு பரிமாற வேண்டும் எனவும், கார் வாங்கித் தருமாறும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, திருமணம் நிறுத்தப்பட்டது. மாட்டிறைச்சிக்கு அரசு தடை விதித்துள்ளபோது, நாங்கள் எப்படி அந்த உணவுகளைப் பரிமாற முடியும்?' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago