ஜெயலலிதா பிரதமராக விரும்பினால் ஆதரவு அளிப்பேன்: மம்தா பானர்ஜி

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா பிரதமராக விரும்பினால் அதற்கு தான் முழு ஆதரவு தர தயாராக இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, "தேர்தலுக்குப் பின்னர் அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகளுடன் இணைந்து செயலாற்ற நாங்கள் தயராக இருக்கிறோம். ஆனால், பாஜகவுடன் ஒரு போதும் இணைய வாய்ப்பில்லை" என்றார்.

மேலும், "தேச நலனுக்காக பாடுபடும் எந்த கட்சிக்கும் திரிணமூல் ஆதரவு உண்டு. நான் பதவிக்காக ஆசைப்படவில்லை, என் அக்கறை எல்லாம் மக்கள் நலன் மீதே"என அவர் தெரிவித்தார்.

ஜெயலலிதா, மாயாவதி போன்ற வலுவான தலைவர்களுடன் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இணைந்து பணியாற்ற முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த மம்தா பானர்ஜி, வாஜ்பாய் தலைமையிலான அணியில் தாங்கள் ஒன்றாக செயல்பட்டதை சுட்டிக்காட்டிய மம்தா, வலுவான தலைவர்களால் தான் வலுவான பாரதத்தை உருவாக்க முடியும் என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்