நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரிய வேண்டும்: மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் நம்பகம் மீது வழக்கறிஞர்கள் கேள்வி

By கிருஷ்ணதாஸ் ராஜகோபால்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் நாம் அளித்த வாக்கு குறிப்பிட்ட அந்தச் சின்னத்தில்தான் பதிவானாதா என்பதை சரிபார்க்கக்கூடிய காகித முறையும் சேர்க்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

சமீபத்தில் நடந்து முடிந்த உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அபரிமிதமான வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் தன்மை குறித்து ஏகப்பட்ட கேள்விகளை பகுஜன் சமாஜ் கட்சியும், ஆம் ஆத்மியும் எழுப்பின.

இந்நிலையில் 2013-ம் ஆண்டு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்களித்தவர் தான் வாக்களித்த சின்னத்திற்குத்தான் வாக்குப் பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்கும் காகிதப்பதிவு முறையையும் சேர்க்க வேண்டும் என்று வழிகாட்டியிருந்தது, அந்த வழிகாட்டுதலை பின்பற்ற உத்தரவிடுமாறு பகுஜன் சமாஜ் கட்சி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது.

இதனையடுத்து இன்று நடைபெற்ற வாதங்களை முன்னிட்டு நீதிபதி செலமேஸ்வர் தலைமை அமர்வு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்குப்பதிவு எந்த சின்னத்திற்கு சென்றுள்ளது என்பதை வாக்காளர்களே சரிபார்க்கும் காகிதப்பதிவு முறையை சேர்க்காதது குறித்து விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று மூத்த வழக்கறிஞர் பி.சிதம்பரம், “ஒரு மனிதன் கண்டுபிடித்ததை அடுத்தவர் ஹேக் செய்ய முடியும். நான் மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தில் நான் விரும்பும் சின்னத்திற்கான பொத்தானை அழுத்துகிறேன் ஆனால் எந்திரம் அதனை எப்படி பதிவு செய்தது என்பதை நான் அறிய முடியாது. வாக்காளரின் விருப்ப வாக்குதான் பதிவாகியுள்ளதா என்பதை வாக்காளர்கள் ஒருபோதும் அறிய முடியாது” என்றார்.

எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் வாக்காளர் தான் பதிவு செய்த சின்னத்தில்தான் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை சரிபார்க்கும் காகிதப் பதிவு முறை கட்டாயமாகிறது, இதுமட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும், என்று பி.சிதம்பரம் மேலும் தெரிவித்தார்.

தற்போதைய மாநிலங்களவை பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி செய்திருந்த மனுமீதுதான் உச்ச நீதிமன்றம் 2013-ம் ஆண்டு தேர்தல் ஆணையத்தை காகித சரிபார்ப்பு முறையை நடைமுறைப்படுத்த அறிவுறுத்தியது. மேலும் சர்ச்சை ஏற்படும்போது வாக்குகளை சரிபார்க்கவும் முடியும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

எனவே வாக்குப்பதிவை சரிபார்க்கும் விவிபிஏடி எந்திரத்தையும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் சேர்க்க வேண்டும் என்று வழக்கறிஞர் பி.சிதம்பரம் வலியுறுத்தினார்.

ஆனால், இதற்கு ரூ.3000 கோடி செலவாகும். ஆனால் இப்போது நிகழ்ந்து வரும் நடைமுறைகளைப் பார்த்தால் 150 ஆண்டுகள் ஆனாலும் சரிபார்ப்பு முறை வரும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றே தெரிகிறது என்றார் அவர்.

‘தென் அமெரிக்காவைத் தவிர வேறெங்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுவதில்லை’ என்று காங்கிரஸ் சார்பில் வாதாடிய கபில் சிபல் தெரிவித்தார்.

இதற்கு உடனடியாக பதில் அளித்த நீதிபதி செலமேஸ்வர், “நான் கூறுவது தவறாக இல்லையெனில், இவிஎம் எந்திரங்கள் உங்கள் கட்சியால்தான் அறிமுகம் செய்யப்பட்டது” என்றார். மேலும் இவர் கூறும்போது, “வாக்குச்சாவடிகளை முற்றுகையிட்டு வாக்குப்பெட்டிகளைத் தூக்கிச்செல்வது போன்ற தீமைகளைக் களையத்தான் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டது” என்றார்.

இதற்கு பதில் அளித்த பி.சிதம்பரம், “விஞ்ஞானம் முன்னேறிவிட்டது அதனால் ஹேக்கிங் நடைபெறுகிறது” என்றார்.இதனையடுத்து மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது உச்ச நீதிமன்றம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்