என்.எஸ்.ஜி. தலைவர் ஜே.என்.சௌத்ரி

By செய்திப்பிரிவு

கறுப்பு பூனைப் படை என்று அழைக் கப்படும் தேசிய பாதுகாப்பு படையின் (என்.எஸ்.ஜி.) தலைவராக, மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஜே.என்.சௌத்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.எஸ்.ஜி. தலைவராக இருந்த அர்விந்த் ரஞ்சன், மத்திய தொழில் பாதுகாப்பு படையின் முழுநேர தலைவராக இனி தொடர்வார்.

மத்திய அரசின் 2 முக்கிய பாது காப்பு படைகள் தொடர்பான இந்த அறிவிப்பை உள்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

என்.எஸ்.ஜி. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜே.என். சௌத்ரி, அசாம் – மேகாலயா பிரிவில் நியமிக்கப்பட்ட 1978ம் ஆண்டு பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். அசாம் காவல்துறை இயக்கு நராக கடந்த ஆண்டு பணியாற்றிய இவர், இதற்கு முன் மத்திய உளவுத் துறையில் (ஐ.பி) பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தலைவராக இருந்த டி.ஜி. ராஜீவ் கடந்த அக்டோபர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து இவரது பணி கூடுதல் பொறுப்பாக அர்விந்த் ரஞ்சனுக்கு வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்