ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது - இன்று கவுன்ட்டவுன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட இருந்தது.

அந்த ராக்கெட்டில் ஜி-சாட் 14 என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டு இருந்தனர்.

ஆனால், கடைசி நேரத்தில் ராக்கெட்டின் 2-வது நிலை இன்ஜினில் திரவ எரிபொருள் கசிவு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட் மூலம் ஜிசாட் செயற்கைக்கோள், ஜனவரி 5-ல் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

அதன்படி, நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.18 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி-டி5 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவன் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 29 மணி நேர கவுன்ட்டவுன் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்