22 நேபாள பெண்கள் டெல்லியில் மீட்பு

By ஏஎஃப்பி

மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 22 நேபாள பெண்களை, போலீஸார் மீட்டனர். இதுதொடர்பாக 2 பேரை தேடி வருகின்றனர்.

நேபாளத்தில் இருந்து பாலியல் தொழிலுக்காக பெண்கள் கடத்தப் படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இந்நிலையில், நேபாள தூதரகத்தில் இருந்து டெல்லி போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்படி, கடந்த வியாழக்கிழமை அதிகாலை டெல்லி சர்வதேச விமான நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் குற்றப்பிரிவு போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

பாலியல் தொழிலில் ஈடுபடுத்த நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட பெண்களில் ஒருவர், சாதுர்யமாக தப்பி டெல்லியில் உள்ள நேபாள தூதரகத்தை தஞ்சம் அடைந்துள்ளார். அவர் அளித்த தகவலின்படி போலீஸார் சோதனை நடத்தி ஓட்டலில் இருந்து 22 நேபாள பெண்களை மீட்டனர்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் இணை ஆணையர் (குற்றப்பிரிவு) ரவீந்திர யாதவ் கூறும்போது, ‘‘பெண்களை கடத்தி வந்த 2 பேர் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் அடையாளம் காணப் பட்டுள்ளனர். இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். மீட்கப்பட்ட பெண்களின் பாஸ்போர்ட்களை ஆய்வு செய்ததில், அவர்கள் கத்தார் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல விசா வாங்கப்பட்டிருந்தது தெரியவந்தது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்