ராகுல் காந்தி தன்னை அரசியலில் நிலைநிறுத்த தவறிவிட்டதால் அவருக்குப் பதிலாக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி முன்னிலைப்படுத்துவதாக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலில், ராகுல் காந்தி, சோனியா காந்தியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி, நரேந்திர மோடியை குறிவைத்து விமர்சித்து வருகிறார்.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பிரியங்காவை முன்னிலைப்படுத்துவது தொடர்பாக பாஜக ஜான்சி தொகுதி வேட்பாளர் உமாபாரதி செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் மேலும் கூறியதாவது: "ராகுல் காந்தியால் காங்கிரஸ் கட்சி அரசியல் ஆதாயம் பெற முடியவில்லை. அதனாலேயே காந்தி குடும்பத்தில் இருந்து இன்னொரு நபர் அரசியல் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். பாஜக தலைவர்களை தோல்வி பயத்தில் உள்ள எலிகள் என விமர்சித்திருந்ததை சுட்டிக்காட்டி பிரியங்கா பகுத்தறிவில்லாமல் பேசுகிறார்" என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago