ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே நேற்று லாரியில் கடத்தப்பட்ட 3 டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாமக்கல்லைச் சேர்ந்த 7 பேரை கைது செய்தனர்.
இது குறித்து சித்தூர் எஸ்.பி. நிவாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் இருந்து செம்மரங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சித்தூர் - பெங்க ளூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீஸார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது நிற்காமல் சென்ற லாரி மற்றும் காரை போலீஸார் விரட்டிப் பிடித்தனர். இதில் லாரியில் 3 டன் செம்மரக் கட்டைகள் இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, அக்கரப்பட்டி பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியன் என்கிற பாலூஸ் (43), பரமத்தி வேலூரைச் சேர்ந்த மணி, மல்லசமுத்திரத்தைச் சேர்ந்த ராம்குமார், அக்கரை வாட்லா பகுதியைச் சேர்ந்த முனியப்பன், ராகுல், முருகேஷ், ராசிபுரத்தைச் சேர்ந்த மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ் வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட அனை வரும் பலமனேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, பின்னர் பலமனேர் சிறையில் அடைக்கப் பட்டனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago