முசாபர் நகர் கலவரம்: ஒரு நபர் கமிஷன் விசாரணை தொடங்கியது

By செய்திப்பிரிவு

முசாபர் நகர் கலவரம் தொடர் பாக உத்தரப்பிரதேச அரசால் அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் கமிஷன் புதன்கிழமை விசார ணையை தொடங்கியது.

அலகாபாத் உயர் நீதிமன்றத் தின் ஓய்வுபெற்ற நீதிபதி விஷ்ணு சகாய் தலைமையிலான இந்த கமிஷன், கலவரத்தால் பாதிக்கப் பட்டவர்களின் வாக்குமூலத்தை வரும் 21-ம் தேதி வரை பதிவு செய்யும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கமிஷன் தனது அறிக்கையை மே 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் எனத் தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ஏற்படுத்தப்பட்ட இந்த கமிஷன் கலவரம் பாதித்த பகுதிகளுக்கு இதற்கு முன் ஒருமுறை சென்று வந்துள்ளது. கலவரம் தொடர்பாக 700க்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றுள் ளது. மேற்கு உத்தரப்பிரதேசத்தில் முசாபர் நகர், ஷாம்லி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் செப்டம்பரில் ஏற்பட்ட கலவரத்தில் 60 பேர் இறந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி அரசு நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

மேலும்