எல்லையில் தொடர்ந்து அத்துமீறும் பாகிஸ்தானுடன், இந்திய அரசு 'கண்டிப்பான' பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கடந்த 2003- ஆம் ஆண்டில் இந்தியாவுடன் கையெழுத்திட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி பாகிஸ்தான் இந்திய எல்லையில் அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது. இந்த தாக்குதல் கடந்த சில நாட்களாக பல மடங்கு அதிகரித்துள்ளது.
கடந்த 7 நாட்களில் பாகிஸ்தான் நடந்திய 10 முறை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இன்றும் ஜம்மு ஆர்.எஸ்.புரா நாக்பால் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. இன்று நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்தியாவுடனான போர்நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து மீறும் பாகிஸ்தானுடன், இந்திய அரசு 'கண்டிப்பான' பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். ஆனால் அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று, பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலில், 3 குழந்தைகள் உள்பட 5 பேர் காயமடைந்தனர். இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
இன்னும் 2 நாட்களில், உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே காஷ்மீருக்கு வரயிருப்பதாகவும் ஒமர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
10 mins ago
இந்தியா
48 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago