மரண தண்டனைக்கு எதிராக பெங்களூரில் ஆர்ப்பாட்டம்- தமிழ் அமைப்புகள் சார்பில் நடைபெற்றது

By இரா.வினோத்

இந்தியாவில் மரண‌ தண்டனையை ரத்து செய்யக்கோரியும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையை தடுக்கும் மத்திய அரசை கண்டித்தும் பெங்களூரில் புதன்கிழமை தமிழ் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

புதன்கிழமை காலை பெங்களூரில் உள்ள 'டவுன் ஹால்' எதிரே கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தின் சார்பில் அதன் தலைவர் சி.ராசன் தலைமையில் கண்டன ஆர்ப்பட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலை கழகம், கர்நாடக கன்னட தமிழ் இயக்கம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளும் கர்நாடக பகுஜன கிராந்தி தளம், பிரகதிபரா விச்சார சமிதி உள்ளிட்ட கன்னட அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது, இந்தியாவில் மரண‌ தண்டனையை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தடுக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

அதுமட்டுமல்லாமல் பாலாறு குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று கர்நாடக சிறைகளில் வாடும் மீசை மாதையன், பிலவேந்திரன் உள்ளிட்ட நால்வரையும் கர்நாடக அரசு உடனடியாக விடுக்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.​

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

2 days ago

இந்தியா

2 days ago

மேலும்