மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம்: முதன்முறையாக மவுனம் கலைத்தது சீனா

By ஏஎன்ஐ

மும்பையில் கடந்த 2008 நவம்பரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானும், லஷ்கர் இ தொய்பாவுமே காரணம் என முதன்முறையாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது.

நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பைக்குள் கடல் மார்க்கமாக நுழைந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் தாஜ் ஓட்டல், நாரிமன் இல்லம், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். 2008 நவம்பர் 26-ம் தேதி நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு பயணிகள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு தீவிரவாத சம்பவங் களுக்கு ஜெய்ஷ் இ முகமது தலைவர் மவுலானா மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதால் அவருக்கு ஐ.நா தடை விதிக்க வேண்டும் என இந்தியா நிர்ப்பந்தித் தது. ஆனால் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சீனா இதற்கு முட்டுக்கட்டை போட்டது. ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஐ.நா.வின் தடை பட்டிய லில் இடம்பெற்றிருந்த நிலையிலும் அதன் தலைவருக்கு தடை விதிக்க சீனா எதிர்ப்பு காட்டியது இந்தியா உட்பட பல்வேறு உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள அனைத்து முக்கிய உறுப்பு நாடுகளும் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா தீவிரவாதிகள் ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி, தல்ஹா சயீத், ஹபீஸ் அப்துல் ரவுஃப் ஆகிய மூன்று தீவிரவாதிகளுக்கு தடை விதிக்க ஆதரவு தெரிவித்திருந்தன. இதற்கும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி சீனா தடுத்து நிறுத்தியிருந்தது. இதனால் உலகநாடுகள் சீனாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.

மூன்று தீவிரவாதிகளுக்கான தடையை நிறுத்தி வைத்ததற்கான சீனாவின் முடிவு நாளையுடன் காலாவதியாகவுள்ள நிலையில், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பு பற்றியும், நவம்பர் 26 மும்பை தாக்குதல் சம்பவத்தில் அதன் பங்கு பற்றியும், பாகிஸ்தானில் இருந்து இதற்காக அளிக்கப்பட்ட நிதியுதவிகள் பற்றி யும் தனது சிசிடிவி9 தொலைக்காட்சி யில் சீனா ஆவணப்படமாக சமீபத்தில் ஒளிபரப்பியுள்ளது.

இதுவரை பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட சீனா முதன் முறையாக மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர் களை பகிரங்கமாக தோலுரித்து காண்பித்திருப்பது இந்தியா உட்பட உலக நாடுகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

தீவிரவாதத்துக்கு எதிராக அனைத்து நாடுகளும் ஓரணியில் திரண்டுள்ள இந்த தருணத்தில், பாகிஸ்தானின் தீவிரவாத விவ காரங்களில் கண்ணை மூடிக் கொண்டு ஆதரவு தெரிவித்தால், சர்வதேச அரங்கில் தனது மரியாதை பறிபோகும் என உணர்ந்த தால் சீனா தனது கொள்கையை மாற்றிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்